DOMAIN பெயர் என்றால் என்ன?


டொமைன் பெயர்(ஆள்களப் பெயர்) என்றால் என்ன?நீங்கள் முகப்புத்தக பக்கத்திற்கு செல்வதற்கான IP முகவரி 2a03:2880:f10c:283:face:b00c:0:25de ஆகும். இதனை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க கடினமாக இருக்கும். அதை ஞாபகம் வைத்திருப்பதை இலகுவாக்கவே தனித்துவமான டொமைன் பெயர் உருவாக்கப்பட்டது. அதாவது ஒருவரின் தொலைபேசி எண்ணை ஞாபகம் வைத்திருப்பதிலும் பார்க்க அவரின் பெயர் மூலம் தொலைபேசி எண்ணை சேமித்து ஞாபகம் வைத்திருப்பது இலகுவானது.
அதற்கு நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்?நீங்கள் அவற்றை உங்களுக்கென சொந்தமாக வாங்கவில்லை.அதனை வாடகைக்கு எடுத்துள்ளீர்கள்.அதனால் தான் பணம் செலுத்த வேண்டும் .பணம் கட்டாது விட்டுப்பாருங்கள் சில தவணைகளுக்கு பிறகு உங்கள் டொமைன் பெயரினை விற்று விடுவார்கள்.
இந்த டொமைன் பெயர் தொடர்பான பிரிவினர்கள் தொடர்பான பாதையை நான்கு வகையாக பிரிக்க முடியும் அதாவது ,
• பதிவகம்(Registry) : .Com .net .org .info போன்ற TLD(Top Level Domain) களின் அனைத்து பதிவுகளையும் பராமரிக்கும் நிறுவனங்கள் பதிவகம் ஆகும். பதிவகமாக வர ICANN இடமிருந்து அனுமதி பெற வேண்டும். உதாரணமாக : Verisign .com இணை கட்டுப்படுத்தும்
• பதிவாளர்(Registrar) : இவர்களிடம் இருந்தே நாம் டொமைன் பெயரினை வாடகைக்கு பெறுகிறோம் உதாரணமாக : WIX,Godaddy,Weebly
• பதிவு செய்பவர் (Registrant) : டொமைன் பெயரினை வாடகைக்கு பெற்று கொள்ளும் நீங்கள்,நான்,நிறுவனங்கள்
• ICANN : இது அனைத்து தகவல்களையும் செயல்முறைகளையும் நிர்வகிப்பதற்கும் ஒழுங்குமுறையாக செயற்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு சபை ஆகும்.பதிவகத்திற்கு அனுமதியை வழங்கும்.
நீங்கள் செலுத்தும் பணத்தின் பெருந்தொகை பதிவாளருக்கும் ஒரு சிறிய அளவு தொகை பதிவகத்திற்கும் ICANN இற்கும் செலுத்தப்படும்.
ஒரு வலைப்பக்கத்தை நடாத்தி செல்வதற்கு Domain name, hosting இரண்டுமே அவசியம். Domain name, hosting இரண்டையும் ஒரே நிறுவனத்திலேய வாங்க முடியும். அவ்வாறு அல்லாதபோது அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் டொமைன் பெயரையும் இன்னொரு நிறுவனத்தில் சேமிப்பதற்கான சேவையகத்தையும் வாங்கும் போது நீங்கள் உங்கள் டொமைன் பெயர் அமைப்பில் வலை சேவையகத்தின் தகவல்களை வழங்க வேண்டும்.ஒரே நிறுவனத்தில் வாங்கினால் இந்த பிரச்சினைகள் உருவாகாது.
உங்கள் டொமைனை நீங்கள் பதிவுசெய்யும்போது, நீங்கள் ஒரு DNS (Domain Name System) உடன் பதிவு செய்கிறீர்கள். DNS என்பது வலை சேவையகங்களின் ஐபி முகவரிகளை அவற்றின் தொடர்புடைய டொமைன் பெயர்களுடன் இணைக்கும் ஒரு தரவுத்தளமாகும். இது டொமைன் பெயர் வாங்கும் கம்பனியால் நிர்வகிக்கப்படும்.
உங்கள் உலாவிக்குச் சென்று ஒரு டொமைன் பெயரைத் தட்டச்சு செய்யும் போது(உதாரணம்:www.facebook.com) , அந்த வேண்டுதல் பதிவகத்திற்கு(Registry) செல்வதுடன், இந்த டொமைன் பெயர் எந்த கம்பனியிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டு பிடித்து அந்த கம்பனியின் DNS உடன் இணைக்கும்.
டொமைன் பெயர் கம்பனி அனைத்து பதிவுகளிலும் www.facebook.com இற்கு பொருத்தமான பதிவு உள்ளதா என DNS தேடுகிறது. அந்த பதிவு கிடைத்தவுடன் அந்த டொமைன் பெயரை சேவையகத்தின் ஐபி முகவரியுடன் இணைக்கிறது. இறுதி முடிவு ? சேவையகம் ஒரு வலைப்பக்கத்தை உங்கள் உலாவிக்கு ஒரு நொடிக்குள் திருப்பித் தருகிறது.
 படத்தை பார்ப்பதன் மூலம் மேலதிக விளக்கத்தை பெற்று கொள்ளவும்.
http://www.quora.com இனை உதாரணமாக வைத்துக்கொண்டு பார்க்கலாம்.
Quora இல் டொமைன் பெயரும் வலை சேவையகமும் தனித்தனியே வாங்கப்பட்டு உள்ளது எனவும் Quora வலை சேவையகம் Fastly எனும் அமெரிக்க வலை சேவையகம் என கொண்டு பார்க்கலாம்,
இப்போது டொமைன் பெயர் வாங்கிய கம்பனியை A என கொள்வோம்.இப்போது Fastly வலை சேவையகத்தால் தரப்பட்ட தகவல்களை Quora தனது A இன் அமைப்பில் (settings) வழங்க வேண்டும்.
Fastly எனும் வலை சேவையகத்தில் பல இணையப்பக்கங்களுக்கான கோப்புகள் இருக்கலாம்.அதனால் Fastly கம்பனி இது Quora இனுடையது என்பதை இனங்கான Quoraஇற்கான கோப்பை http://fastly.quora.com என உருவாக்கும்.இவ்வாறே ஏனைய வலைப்பக்கங்களின் பெயருடன் கோப்பினை Fastly கம்பனி உருவாக்கும்.
நீங்கள் http://www.quora.com என உங்கள் உலாவியில் தட்டச்சிடும் போது உங்கள் உலாவிக்கு எது Quora ? Quora இன் IP முகவரி என்ன என்று எதுவும் தெரியாது.இவை எல்லாம் A கம்பனியின் (டொமைன் பெயர் கம்பனியின்) DNS சேவையகத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். DNS இற்கு வேண்டுதல் அனுப்பப்பட்டு IP முகவரியை கண்டுபிடித்து டொமைன் பெயரை Fastly வலை சேவையகத்திற்கு வழிநடத்தும் சேவைக்காக நீங்கள் அவர்களுக்கு பணம் செலுத்துகிறீர்கள். fastly.quora.com என தட்டச்சிட்டாலும் நீங்கள் Quora இன் முகப்பு பக்கத்தை அடைய முடியும்.
டொமைன் பெயர் கம்பனி பார்வையாளர்களை சரியான சேவையகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும். டொமைன் பெயர் DNS சேவையகத்தில் இல்லையென்றால் உங்கள் வலைத்தளத்தை யாரும் அடைய முடியாது. இந்த நிறுவனங்கள் டொமைன் பெயர்களை இலவசமாகக் கொடுத்தால், அவர்கள் தங்கள் பெயர் சேவையகங்களை(Server) எவ்வாறு இயக்க முடியும்?
இந்த அனைத்து செயற்பாடுகளும் நீங்கள் http://www.quora.com என தட்டச்சிட்டு காத்திருக்கும் அந்த நொடியில் பின்புலத்தில் மிக வேகமாக இடம்பெறும்.
அந்த சேவையகங்களை பராமரித்தல் , பார்வையாளர்களுக்கு வழிப்படுத்தலுக்கே உங்களிடம் இருந்து கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
சில பதிவாளர்கள் இலவசமாக தருகின்றனர்.இது அவர்களின் டொமைன் பெயரின் ஒரு பாகமாக இருக்கும் உதாரணமாக
 www.quora.wordpress.com
 www.quora.weebly.com
 www.quora.blogspot.com
 http://www.quora.board.com என்றவாறு இருக்கும்.இது Sub domain எனப்படும்.

Google add

thangampalani add code converter
Add Code Converter

வணக்கம் நண்பர்களே.. பிளாக்கர் தளம் மூலம் கணிசமான பணம் சம்பாதிக்க முடியும். பிளாக்கர் வலைப்பூக்களில் Google போன்ற விளம்பர நிறுவனங்கள் கொடுக்கும் நிரல்வரிகளை உங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகிறது.

தொடர்ச்சியாக உங்ளுடைய தளத்தை நிறையபேர் படிக்கும்போது தளமானது பிரபலமடையும். அவ்வாறு பிரபலமான தளத்திற்கு google adsense, chitka, AdSense, Text Link Ads, AdBrite, LinkWorth, Amazon போன்ற நிறுவனங்கள் வலைத்தளங்களுக்கான ஆட்சென்ஸ் (விளம்பரங்கள்) தருகிறது.

உங்கள் தளம் அவர்கள் குறிப்பிட்ட AdSense program policies களுக்கு உட்பட்டு இருப்பின் உங்களுக்கு ஆட்சென்ஸ் அப்ரூவல் உடனடியாக கிடைக்கும். பிறகு உங்கள் தளத்தில் காட்டுவதற்கான விளம்பர நிரல்கள் அத்தளத்தில் கிடைக்கும்.

அவ்வாறு பெற்ற ஆட்சென்ஸ் கோட் (Adsense code) பெரும்பாலும் JAVA SCRIPT அடிப்படையாகக் கொண்டிருக்கும். நேரடியாக அந்த நிரல்வரிகளை பிளாக்கர் டெம்ப்ளேட்டின் நிரல்வரிகளுடன் இணைக்கும் போது அவை வேலை செய்யாது. தனியாக ஒரு விட்ஜெட்டாக வைக்கும்பொழுது அவைகள் பிளாக்கர் தளங்களில் டிஸ்பிளே ஆகும்.

பிளாக்கர் பதிவிற்கு மேலும் கீழும் விளம்பரங்களை வைக்க வேண்டுமெனில் கண்டிப்பாக அந்த நிரல்வரிகளை Encode செய்ய வேண்டும். பிளாக்கரில் உள்ள நிரல் வரிகளானது XML அடிப்படையில் இயங்க கூடியது. எனவே அதில் பயன்படுத்தப்படும் HTML Tag களை encode செய்த பிறகு பயன்படுத்தினால், விளம்பர நிரல்கள் நன்றாக தொழிற்படும்.


அந்த வகையில் உங்கள் விளம்பர நிரல்வரிகளை பிளாக்கருக்கு ஏற்றவாறு கன்வர்ட் செய்ய சில இணையதளங்கள் உள்ளன. இந்த தளத்திற்கு சென்று http://www.eblogtemplates.com/blogger-ad-code-converter/ அதிலுள்ள பெட்டியில் உங்கள் விளம்பர கோடிங்குகளை கொடுத்து பிளாக்கருக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

அதாவது encode செய்துகொள்ளலாம். பிறகு மாற்றப்பட்ட நிரல்வரிகளை உங்கள் பிளாக்கரின் வார்ப்புருவில் வேண்டிய இடத்தில் சேர்த்து விடுங்கள். இப்போது உங்கள் விளம்பரங்கள் தளத்தில் அருமையாக காட்சியளிக்கும்.

கீழுள்ள இணைப்பை அழுத்தி, உங்களுடைய கூகிள் ADD Code - ஐ Encode செய்துகொள்ளலாம்.



Encoding என்ற உடனேயே இந்த தளமும் நினைவுக்கு வருகிறது. நான் அடிக்கடி பயன்படுத்தும் தளமும் கூட.. www.centricle.com  ADD Code Converter என்ற தளத்தில் tools என்ற ஆப்சனைக் கிளிக் செய்து தோன்றும் பெட்டியில் உங்கள் விளம்பர நிரல்வரிகளைக் கொடுத்து encode, decode செய்து கொள்ளமுடியும்.



இந்த தளத்தில் நேரடியாக உங்கள் விளம்பர கோடிங்கை convert செய்ய இந்த இணைப்பில் செல்லவும்.

இந்த இணைப்பில் சென்று அங்குள்ள முதல் பெட்டியில் நிரல்வரிகளை உள்ளிட்டால் தானாகவே உங்களுக்கு encode செய்யப்பட்ட நிரல்கள் கீழுள்ள பெட்டியில் கிடைக்கும்.

நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் போன்றவைகளைப் பயன்படுத்தினாலும் இந்த மாற்றங்கள் AdSense program policies க்கு எதிரானது அல்ல. அதாவது இதனால் ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

Xml blogger -க்கு ஏற்றவகையில் adsense code-ஐ அதற்குத் தகுந்தவாறு மாற்றுகிறோம்.. அவ்வளவே.. இதையே தளத்தில் page source சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். Page Source -ல் விளம்பர நிறுவனம் அளித்த ஒரிஜினல் விளம்பர நிரல்வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே காட்டும்.

இவ்வாறு encoding செய்யும் போது HTML ஸ்பெஷல் கேரக்டர்கள் <, >, & போன்றவை <, >, & இவ்வாறு மாற்றப்படுகிறது. அவ்வளவே..!!!!

இனி உங்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பர நிரல்வரிகளை உங்கள் தளம், வலைப்பூவில் உள்ளிட்டு, கணிசமான பணம் சம்பாதியுங்கள்...


கம்ப்யூட்டர் Operating System பணிகள்

ஆபரேட்டிங் சிஸ்டம் - பணிகள் மற்றும் முக்கியத்துவம்
(கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கான பதிவு)

கம்ப்யூட்டரின் உயிர் போன்றது ஆபரேட்டிங் சிஸ்டம். இது இருந்தால்தான் கம்ப்யூட்டர் இயங்கும். இதை தமிழில் இயங்குதளம் என கூறுவார்கள். ஆங்கிலத்தில் சுருக்கமாக OS என குறிப்பிடுவர். 

இயங்குதளங்களில் ஒரு சில வகை உண்டு. உதாரணமாக விண்டோஸ், லினஸ்க், உபுண்டு போன்றவற்றை குறிப்பிடலாம். 

கம்ப்யூட்டர் - ஆபரேட்டிங் சிஸ்டம் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்துள்ள ஒரு விடயம் ஆகும். மனித உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது போலதான் கம்ப்யூட்டர் - இயங்குதளம் உறவு.

கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர் பெற்று இயங்குவதற்கு கண்டிப்பாக Operating System அவசியம். இது இல்லையென்றால் கம்ப்யூட்டர் நிச்சயமாக இயங்காது. Operating System கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமங்களை இயக்கச் செய்து, ஒழுங்குபடுத்துகிறது. 
works-of-operating-systems

ஆபரேட்டிங் சிஸ்டம் - முக்கிய பணிகள்
ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஒரு அற்புதமான நிர்வாகி என கூறலாம். கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் பணிகளை அற்புதமாக நிர்வகிக்கும் வேலையை இது செய்கிறது. கம்ப்யூட்டரில் உள்ள Hardware களை நிர்வகிப்பதும் ஆபரேட்டிங் சிஸ்டம்தான்.

கம்ப்யூட்டருடன் இணைந்துள்ள Monitor, Keyboard, Printer போன்ற ஹார்ட்வேர்களை நிர்வகித்து பணிகளை வாங்குவதும் இதன் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று.

உதாரணமாக, கம்ப்யூட்டரில் நாம் கொடுக்கும் இன்புட்களை கவனித்து, அந்த இன்புட்களுக்கான அவுட்புட் என்ன என்பதை திரையில் காட்டும் செயல்களை செய்கிறது ஆபரேட்டிங் சிஸ்டம்.  அதுமட்டுமல்ல...இது கம்ப்யூட்டரில் பல்வேறு பணிகளை நிர்வகிக்கிறது.

ஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை நிர்வாக பணிகள்

1. நினைவக மேலாணமை
2. பணி மேலாண்மை
3. கோப்பு மேலாண்மை
4. உள்ளீடு மற்றும் வெளியீடு மேலாண்மை

ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புத்திசாலித்தனம்:

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்துகொண்டு, அதற்கேற்றார்போல அதைப் பயன்படுத்திக்கொள்ளும். குறிப்பாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் நினைவகத்தில் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் மென்பொருகள் இருப்பதற்கான இடம், தட்டச்சிடுகிற விவரங்கள் இருக்கும் இடம், Disk-ல் கோப்புகளைப் படிக்கும்போது அதனுடைய விபரங்களை வைக்க வேண்டிய இடம் ஆகியவற்றை இதுவே தீர்மானிக்கிறது.

மல்டி டாஸ்க் - Multi Task

தற்பொழுது உபயோகத்தில் உள்ள அனைத்து ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த மல்டி டாஸ்க் அமைப்பு உள்ளது. மல்டி டாஸ்க் அமைப்பு என்பது கணினியில் ஒரே நேரத்தில் பல்வேறு அப்ளிகேஷன்களைத் திறந்து பணிபுரிவதாகும். உதராணமாக எம்எஸ் வேர்ட், போட்டோஷாப், எக்செல், இணைய உலவுவதல் (Browsing) போன்ற பல்வேறு புரோகிராம்களைத் திறந்து அதில் பணிபுரிவதைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு பல்வேறு புரோகிராம்கள் செயல்பாட்டில் இருக்கும்போது அவை ஒன்றுக்கு ஒன்று பிரச்னையில்லாமல், சீராக இயங்குவதற்கு வழிவகை செய்து கொடுப்பது ஆபரேட்டிங் சிஸ்டம்..

அதாவது வாய்க்காலில் ஓடும் நீரை , நான்கைந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சரியான பாதைக்கு மடை திருப்புவதைப் போல என்று கூறலாம்.

வாய்க்கால் எங்கும் நீரை இடையில் உடைப்பு எடுக்காமல் பார்த்துக்கொள்வதைப் போல... இந்த புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்ளாமல் (Crash & Clash) தன்னுடைய பாதையில் செயல்படும்படிச் செய்வது இந்த ஆபரேட்டிங் சிஸ்டமே..!

கோப்பு நிர்வாகம்: (File Management )

நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கும் கோப்புகள், மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கான கோப்புகள், அவற்றிற்கான கோப்புறைகள் போன்றவற்றையும் இயங்குதளமே பராமரிக்கிறது. நீங்கள் கோப்புகளின் மீது செயல்படுத்தும் அனைத்து வேலைகளுமே ஆபரேட்டிங் சிஸ்டத்தால் நடத்தப்படுபவைதான். 
உதாரணமாக கோப்பு ஒன்றை அழிக்கிறீர்கள் என்றால் அதை சரியான அழிப்புச் செயலாக மாற்றுவது ஆபரேட்டிங் சிஸ்டம்தான். 
நீங்கள் கொடுக்கும் கட்டளைகளைப் புரிந்துகொண்டு, Delete கொடுத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கோப்பு அளிக்கபட வேண்டும்  என புரிந்துகொண்டு அந்த செயலைச் செய்கிறது. 
அதுபோல நீங்கள் கோப்புகளை நகர்த்துதல், கோப்புகளை ஓரு கோப்புறையிலிருந்து மற்றொரு கோப்புக்கு கொண்டு செல்லுதல், காப்பி செய்தல் , அந்த கோப்புகளுக்கு பெயர்மாற்றம் செய்தல் போன்ற செயல்களையும் செய்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
ஒரு குறிப்பிட்ட பணியை இரண்டு பகுதிகளாப் பிரித்து இரு cpu க்களிடம் கொடுத்து அந்த வேலையை முடிக்கச் செய்யும் ஆற்றலையும் பெற்றுள்ளது operating system.
கோப்புகளை உருவாக்கி அதைச் சேமிக்கும்பொழுது அது சேமிக்கப்படும் நேரம், தேதி, கிழமை ஆகியவற்றை குறிப்பதும், கோப்புகளை மறைக்க, கோப்புகளை படிக்க என்கிற Hidden, Readonly பண்புகளை கொடுக்கும்பொழுது அவற்றை மேற்கொள்வதும், 
ஒரு குறிப்பிட்ட கோப்பின் பெயரை அதே வகையான கோப்பிற்கு பெயரை அதே பெயரைக் கொடுக்கும்பொழுது ஏற்றுக்கொள்ளாமல் செய்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகள்தான்.
ஆக, கணினியில் நீங்கள் எந்த ஒரு பணியை மேற்கொள்ளும்பொழுதும், அதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்வதும், வகுத்துக் கொடுப்பதும் கண்ணுக்குத் தெரியாத இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். 
அதனால்தான் இதனை இயங்குதளம் என்கிறோம். இதன் மீதுதான் மற்ற அனைத்து அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. கம்ப்யூட்டருக்கு தேவையான ஒரு இயக்க மென்பொருள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் அது மிகையாது. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல, ஆபரேட்டிங் சிஸ்டம் இன்றி எந்த ஒரு  கம்ப்யூட்டரும் இயங்க முடியாது.

லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க

லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.

லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் பயன்படுத்தும் வழிகளைச் செம்மைப் படுத்தும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.

நீங்கள் பேட்டரி பவரில் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் ப்ராசசர் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, பேட்டரியின் மின் சக்தி விரைவில் தீர்ந்துவிடும் என்பதனை உணர்ந்திருப்பீர்கள். 

அதற்காக, நாம் லேப்டாப்பில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில், நாம் விண்டோஸ் சிஸ்டத்திடம், ப்ராசசரின் செயல்பாட்டின் தீவிரத்தினை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம் என்பதனை செட் செய்திடலாம். 

இது கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தினைச் சற்றுக் குறைக்கலாம். எனவே, முதலில் சோதனை அடிப்படையில், இதனை முதலில் பார்க்கலாம்.

முதலில், லேப்டாப் கம்ப்யூட்டரை மின்சார இணைப்பிலிருந்து நீக்கவும். ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, power options என டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் விண்டோவில், current plan அடுத்து, 'Change plan settings' என்பதில் கிளிக் செய்திடவும். 

அடுத்து 'Change advanced power settings' என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில், 'Processor power management என்பது வரை கீழாகச் செல்லவும். இந்த ஆப்ஷனை விரித்து, Maximum processor state' என்ற ஆப்ஷனைத் தேடிக் காணவும். 

இங்கு எப்போதும் 100% என்ற நிலையில் இருக்கும். இதனைக் குறைத்து அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

நீங்கள் அமைத்தது சரியாக வரவில்லை என்றால், அதன் அடிப்படையில் விண்டோஸ் இயக்கம் முழுமையாக இல்லை எனில், பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவிற்கு மீண்டும் சென்று, மாறா நிலைக்கு மாற்றும்படி தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

கணினியில் மிகவும் இலகுவாக Drivers Update செய்து கொள்ள.....

ஹாய் நண்பர்களே இன்று ஒரு சின்ன பதிவு ஆனால் மிகவும் பயனுள்ள பதிவு என்ன என்று யோசிக்காதிங்க கீழ வாசிங்க விளங்கும்.
நம் சிலர் கணினியை Format அவசரப்பட்டு கடைசியில் Drivers இல்லாமல் கடைக்கு கொண்டு போய் கொடுத்தால் அவன் சுமார் 800/- எடுப்பன் அதலாம் நமக்கு தேவையா.
நீங்கள் கணினியை Format செய்தால் கவலைய விடுங்க இந்த மென்பொருள் மூலம் எல்லா Drivers Update செய்யலாம்.
முதலில் : 
அதன் பின்னர் உங்களுடைய கணினியில் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் இன்டர்நெட் ஒன் செய்து விட்டு
இவ்வாறு வரும் அதில் Start Scan கொடுங்கள் 
அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Update செய்ய வேண்டிய அணைத்து Drivers காடும் அதில் நீங்கள் உங்களுடைய Drivers Update செய்து கொள்ளலாம் 

Download Hare கொடுத்த பின்னர் உங்களுடைய கணிணியில் இன்டர்நெட் மூலம் தரவிறக்கம் செய்து Download ஆகும் அதுக்கு பிறகு அவ்வளவுதான்
எல்லாம் நிறுவிய பின் restart கேக்கும் கொடுத்தால் சரி இதுக்கு மேல என வரும் எண்டு உங்களுக்கு செய்து பார்த்தல் தெரியும்.

 

WIFI PASSWORD HACK CRACK TOOL 2014 UPDATED - முயற்சி செய்து பாருங்கள்

 

Windows 8.1 With Crack ( 100% Direct Download ) - நேரடியாக தரவிறக்கம் செய்ய,,,,,,,



இன்று நாம் பார்க்கப் போவது Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று? அநேகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் தான். Microsoft நிறுவனம் தனது 
பயனாளர்களுக்கு புதியதை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கு. அந்த வகையில் நாமும் Windows 8.1பதிப்பை Crack உடன் இலவசமாக Download செய்துகொள்வோம். 





Windows இனை பணம் கொடுத்து வாங்குவது என்றால்  $119 கொடுத்து வாங்க வேண்டும். இது இலங்கை பணப்படி  15470 ஆகும். இவ்வளவும் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு எம்மைப்போன்ற சாதரனமானவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் நாம் இம்மென்பொருளை crack உடன் இலவசமாக தரவிறக்குவதால் இதனை இலகுவாக பயன்படுத்தலாம். நான் கீழே கொடுத்துள்ள Crack ஐ active செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இது கீழேயுள்ள link இல் உங்களுக்கு விருப்பமானதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Download: 

windows 8.1 pro  X32 direct link(2.60 GB)



Download: 

windows 8.1 pro  X64 direct link (3.50 GB)


இதோ கீழே Crack உள்ளது அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
**********************************

***************************************

**********************************************
**********************************************