Tower of Hanoi


கணிதப்புதிர்


நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று குச்சிகள் உள்ளது அதில் ஒரு குச்சியில் ஒரு சிறு தட்டு அதன் மேல் சற்று பெரிய தட்டு அதன் மேல் இன்னும் கொஞ்சம் பெரிய தட்டு என வரிசைகிரமமாக ஏறு வரிசையில் அமைந்த சில தட்டுகள் உள்ளது இப்போது புதிர்  என்னவெனில்
மேலிருந்துதான் தட்டுக்களை  வரிசையாகத்தான் எடுக்க வேண்டும். நடுவில் உள்ளதையோ அடியில் உள்ளதையோ மாற்றி மாற்றி  எடுக்க கூடாது.
ஒருமுறை ஒரு தட்டை மட்டும்  எடுத்து மற்றொரு குச்சியில் பொருத்த வேண்டும்.
பெரியதட்டின் மேல்தான் சிறிய தட்டை வைக்க வேண்டும் சிறியதட்டின் மேல் பெரிய தட்டினை வைக்க கூடாது .
அருகில் உள்ள படத்தினை பாருங்கள் அடியில் உள்ள பழுப்பு மிக பெரிய தட்டு நீலம் அதைவிட சிறியவை நீல தட்டும் மஞ்சள் தட்டும் கடைசியில் உள்ள சிவப்புதட்டு எல்லாவற்றையும் விட மிக மிக சிறியது முதலில் சிவப்புத்தட்டினை எடுத்து காலியாக உள்ள இரண்டு குச்சிகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தவேண்டும் அடுத்தபடியாக மஞ்சள் தட்டினை எடுக்க வேண்டும் மஞ்சள்தட்டினை சிவப்புதட்டின் மீது பொருத்த முடியாது  ஏன் எனில் மஞ்சள் தட்டினைவிட சிவப்புதட்டு சிறியது எனவே மீதி காலியாக உள்ள குச்சியில் பொருத்த வேண்டும் . இப்பொழுது நீல தட்டினை  எடுக்க முடியாது ஏன் எனில் நீலத்தட்டினை எடுத்து எதன் மீதும் பொருத்த முடியாது மஞ்சளும், சிவப்பும் நீலத்தட்டினைவிட சிறியது.  எனவே மிகச்சிறிய சிவப்பு தட்டினை எடுத்து அதைவிட பெரிய தட்டான மஞ்சள் தட்டின் மேல் வைக்க வேண்டும் இப்பொழுது நீல தட்டினை  எடுத்து காலியாக உள்ள குச்சியின் மேல் பொருத்தலாம் மீண்டும் இதே வழிமுறையை தொடர வேண்டும் .

இந்த புதிருக்கான தீர்வு 2– 1கணித சூத்திரம் ஆகும்
மூன்று தட்டுகள் எனில்  7 நகர்தல்களில் அதே வரிசை கிரமத்தில் மற்றொரு இடத்தில் நகர்த்த வேண்டும்
 23-1=8-1=7
 நான்கு தட்டுகள்  எனில் 15 நகர்தல்களில் செய்ய வேண்டும் மூன்று அல்லது நான்கு தட்டுகள் இருந்தால்   எளிமையாக செய்யலாம் ஆனால் தட்டுகளின்  எண்ணிக்கை அதிகரித்தால்  இதை செய்வது கடினம் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நகர்தல்களில் செய்ய முடியும்

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க


Increase Internet Speed


சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


1. XP -->கிளிக் programs--> Run

 windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் -
gpedit.msc


3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
  • Computer Configuration
  • Administrative Templates
  • Network
  • QoS Packet Scheduler
  • Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும். 




இப்போ OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும். 

Bluetooth Vs Wi-Fi – என்ன வேறுபாடு?

Bluetooth Vs Wi-Fi – என்ன வேறுபாடு?

செல்லிடத் தொலைபேசி போன்று செல்லிடக் கணினியும் (mobile computers) தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வந்துள்ளது.. அதற்கேற்றாற் கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றது. அமர்ந்த இடத்திலிருந்தே வயர் இன்றி கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்களிடையே தொடர்பாடல் மேற்கொள்ளவே கணினிப் பயனர் பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் கம்பியில்லாத் தொடர்பாடல் முறை பெரிதும் வரவேற்கப்படுகிறது. வயறின்றி ஏனைய கணினிகளுடன் இணைக்கும் வசதியுடன் கூடிய மடிக்கணினிகளும் தற்போது அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றன.நீங்கள் ஒரு மடிக் கணினி அல்லது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவரா? அப்படியனால் ப்லூடூத், வைபை போன்ற வார்தைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பயன்படுத்தியும் இருக்கலாம். இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் என்ன செய்கிறன? எந்த வகையில் அவை வேறு படுகின்றன?

ப்லூடூத் - வைபை இவை இரண்டுமே கம்பியில்லா கணினி வலையமைப்புக்கான தொழில் நுட்பங்களே இவை கம்பிகளுக்குப் பதிலாக வான் அலைகளை (Radio Frequency) மூலம் வலையமைப்பை உருவாக்குகின்றன.. இவையிரண்டும் 2.4 Ghz அலைவரிசையில் செயல்பட்டாலும் அவை பயன் படுத்தப்படும் விதத்தில் மாறுபட்டு நிற்கின்றன.வைபை தொழில் நுட்பத்தின் பிரதான நோக்கம் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களில் கம்பியில்லா அதிவேக இணைய இணைப்பைப் பெறுவதே என கடந்த வாரம் பார்த்தோம். எனினும் ப்லூடூத் தொழில் நுட்பத்தின் பிரதான பயன்பாடு ஒரு தனி நபர் சார்ந்த வலயமைப்பை உருவாக்குவதாகும். .

அதாவது ஒரு தனி நபருடைய கணினியோடு கையடக்கத் தொலைபேசி ப்ரிண்டர், கேமரா போன்ற சாதனங்களை குறுகிய ஒரு வீச்சினுள் வயரின்றி இணைத்து அவற்றிற்கிடையே டேட்டாவைப் பரிமாறிக் கொளவதாகும். இவ்வாறான இணைப்பை Personal Area Network (PAN) என அழைக்கப்படும்.

உதாரணமாக ப்லூடூத் வசதி கொண்ட ஹெட்செட்டைப் (hands free) பொருத்துவதன் மூல்ம் வாகனமொன்றைச் செலுத்தியவாறோ அல்லது தங்கள் வேலையில் எந்த இடையூறுமில்லாமலே செல் போன் அழைப்புக்கு செவி மடுக்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் ப்லூடூத் மூலம் ஒரு செல்போனைக் கணினியில் இணைத்து பைல் பரிமாற்றம். செய்தல், மற்றும் செல்போனிலிருந்து இணையத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வசதிகளையும் பெறலாம்.
ப்லூடூத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும்போது முதலில் அந்த சாதனங்களை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். இதனைப் pairing என்ப்படும். அவ்வாறு இரண்டு சாதனங்களைப் பெயார் செய்யும் போது அவற்றில் ஒரு சாதனம் மற்றைய ப்லூடூத் வசதி கொண்ட சாதனத்தைத் தேடிக் கண்டறிய வேண்டும். குறிப்பிட்ட வீச்சினுள் தேடிக் கண்டறிந்து கொள்ளும். அடுத்த ப்லூடூத் சாதனத்தை அதன் திரையில் காண்பிக்கும். அவ்வாறு கண்டறியும் சாதனத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பாஸ்கீ எனும் ஒரு இலக்கத்தை அழுத்த வேண்டும். இரண்டு சாதனத்திலும் ஒரே பாஸ்கீ (passkey) வழங்கி அது ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இரண்டு சாதனங்களும் தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்..

- தற்போது மடிக் கணினிகள் வைபை மற்றும் ப்லூடூத் இணைப்புக்கான வசதியுடனேயே தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் ப்லூடூத் / வைபை வசதி இல்லை எனின் வைபை அடெப்டர் போன்று ப்லூடூத் எடப்டரைப் புறம்பாக பொருத்திக் கொள்ளலாம். இதனை Dongle -டொங்கில் எனவும் அழைக்கப்படும்.- வைபை இணைப்பில் பொதுவாக கணினிகளே இணைக்கப்படுகின்றன. அதிவேக இணைய இணைப்பு தவிர வைபை மூலம் பைல், ப்ரோக்ரம் போன்ற மென்பொருள்களையும் ப்ரிண்டர், ஸ்கேனர் போன்ற வன்பொருள்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

- வைபையை விடவும் ப்லூடூத் தொழில் நுட்பம் பயன் படுத்துவது எளிமையானது, ஏனெனில் வைபை தொழில் நுடபத்தைச் செயற்படுத்த ரூட்டர், மோடெம் போன்ற சாதங்களை நிறுவுதல் அவற்றில் செட்டிங் மாற்றியமைத்தல் போன்ற பல செயற்பாடுகள் உள்ளன. அவ்வாறே மற்றுமொரு கணினியிலிருந்து வளங்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் சில செட்டிங் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.. ப்லூடூத்தில் இது போன்ற சிரமங்கள் இல்லை.

- ப்லூடூத் தொழில் நுட்பம் 30 முதல் 100 அடிகள் வரையிலான மிகவும் குறுகிய வீச்சினுள்ளேயே டேட்டாவைக் கடத்துகிறது. எனினும் வைபை சிக்னல் அதனை விட அதிகமாக 800 அடிகள் அல்லது அதற்கு மேலும் செல்லத்தக்கது.

- ப்லூடூத் மற்றும் வைபை என்பன அவற்றிற்கேயுரிய ப்ரொட்டோகோல எனும் விதிமுறைகளைக் கொண்டுள்ளன. தற்போது ப்லூடூத் தொழில் நுட்பம் அதன் நான்காம் பதிப்பை அடைந்துள்ளது. அதேவேளை வைபை தொழில் நுட்பத்தில் அண்மைய பதிப்பாக (வர்யர்லெஸ் என்) 802.11n, எனும் விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

- ஏராளமான டெஸ்க்டொப் மற்றும் மடிக் கணினிகளை வைபை மூலம் இணைத்து ஒரு கம்பியில்லா உள்ளக வலையமைப்பை Local Area Network (LAN) உருவாக்கி விடலாம். எனினும் ப்லூடூத் கொண்டு ஒரு உள்ளக வலையமைப்பை உருவாக்க முடியாது. இதன் மூலம் தனி நபர் கணினி வலயமைப்பே உருவாக்கப்படுகிறது.

- வைபை இணைப்பில் 802.11g எனும் பதிப்பில் டேட்டா பரிமாறும் வேக மானது 54 Mbps அளவில் செயல்படுகிறது. எனினும் ப்லூடூத் இணைப்பின் பதிப்பு ஒன்றில் வேகமானது 1 Mbps அளவிலேயே செயல்படுகிறது.

வைபை – ப்லூடூத், இரண்டுக்குமிடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் பயன் மிக்கவை. பரவலாக பயன்பாட்டிலுள்ளவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. 

how to prevent autorun.inf virus into pc

Pendrive -ல் உள்ள Autorun.inf எனும் வைரஸ் கணினியை பாதிக்காதவாறு தடுப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

1. உங்கள் கணினியில் Run விண்டோ திறக்கவும். (Start+R)
2. அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்
3. புதியதாக ஒரு பாப்அப் விண்டோ திறக்கும்.
4. அதில் Administrative Templates=>System என்பதை தேர்ந்தெடுங்கள்.
5. அடுத்து Turnoff Autoplay என்பதில் double click செய்யுங்கள்.
6. தோன்றும் பெட்டியில் Turnoff autoplay என்பதின் கீழ் உள்ள எனேபில்ட் என்பதை தெரிவு செய்யுங்கள். அதிலேயே Turnoff Autoplay on என்பதில் all drives என்பதை தெரிவு செய்யுங்கள்.

இனி நீங்களே பென்டிரைவை கிளிக் செய்து திறந்தால் மட்டுமே பென்டிரைவ் திறக்கும். ஆட்டோமேட்டிக்காக அதுவே திறக்காது. 

நண்பர்களிடம் வாங்கிய பென்டிரைவ்களையோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கு இரவலாக கொடுத்த பென்டிரைவை மீண்டும் பெற்று பயன்படுத்தும்போதோ கணினியில் இணைத்தவுடன் இரட்டை கிளிக் செய்து பென் டிரைவ் திறக்க கூடாது. இதனால் அவர்களின் கணினியிலிருந்து உங்கள் பென்டிரைவிற்கு ஏதேனும் வைரஸ் தொற்றியிருந்தால், உடனே உங்கள் கணினிக்கும் பரவிவிடும் அபாயம் உள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட பென்டிரைவை கணினியில் செருகியவுடன், உங்கள் பென்டிரைவிற்குரிய டிரைவரின் பெயரை Start+R அழுத்தி ரன் விண்டோ திறந்து, அதில் பென் டிரைவிற்கான எழுத்தை தட்டச்சிடவும். (எனது பென்டிரைவின் டிரைவர் எழுத்து G:)

பிறகு என்டர் அழுத்துங்கள். அல்லது ok கிளிக் செய்யும்போது உங்கள் பென்டிரைவிற்கான டிரைவ் திறந்துகொள்ளும். இந்த முறையில் நீங்கள் திறக்கும் பென்டிரைவில் ஏதேனும் வைரஸ் இருந்தால் கணினியை பாதிக்காது. செயல்படுத்திப் பாருங்களேன்..!!

கணினி பிரச்னைகளும் தீர்க்கும் வழிமுறைகளும்.


மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அரியதொரு பரிசு கணினி. பெரும்பாலான வேலைகள் தற்பொழுது கணினியைப் பயன்படுத்தி செய்து முடிக்கிறோம். எப்படியெனில் ஒரு வாகனத்தை இயக்குவது முதல்... 
சாதாரணமான தட்டச்சு வேலைகள் வரை இன்று அனைத்தையுமே கணினியின் மூலமே செய்து முடித்துவிடுகிறோம்.

குறிப்பாக செயற்கை கோள்களை உருவாக்குவது முதல் அவற்றை செலுத்தி, வானில் நிலைநிறுத்தி இயக்குவதை வரை அனைத்துமே கணினியின் மூலம்தான் செய்யப்படுகிறது. மிகப் பெரிய நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களையும், கணக்குகளையும் கூட இது அநாயசமாக தீர்த்துவிடுகிறது. இத்தகைய பயன்மிக்க கணினியானது சில வேளைகளில் சிற்சில பிரச்னைகளையும் கொண்டுவரும். அவற்றை நாமே சரிசெய்து மீண்டும் கணினியை பழைய நிலைக்கு மீட்க முடியும். அதுபற்றியதொரு தொகுப்புதான் இந்த கட்டுரை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குறிப்புகளைக் கொண்டு சிறிய சிறிய பிரச்னைகளை நீங்களே தீர்த்துவிடலாம்.

கணினி தொடக்கம் அடைவில்லையா? 


உங்கள் கணினியை தொடக்க முடியவில்லை எனில் அதற்கு முக்கியமான காரணம் மின் தொடர்பு அற்று இருப்பதுதான். முதலில் கணினிக்கு வரும் மின்சார வயர்களின் தொடர்ச்சி சரியான இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். கணினியோடு இணைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்குகளையும் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு, ஏதேனும் பிளக்குகள்(plugs) சரியாக பொருந்தாமல் இருப்பின் அவற்றை நன்றாக அழுத்தி விடவும். உங்களுடைய  UPS -ல் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கவும். பிறகு UPS- சார்ஜ் ஆகியிருக்கிறதா என்பதை சோதித்துவிடுங்கள்.

கணனி தொடங்கிவிட்டது. ஆனால் வெற்றுத் திரை மட்டுமே தெரிகிறதென்றால்..


இதுவும் மற்றொரு வகையான மின்சாரப் பிரச்னையால் உருவாவதுதான். அதாவது கணினி திரைகள் சரியான போதுமான மின்சாரம் கிடைத்தால் மட்டுமே இயங்ககூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அச்சூழலில் உங்கள் கணினித் திரைக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை என்றாலும் கணினி திரையானது செயற்படாமல் போகும். எனவே கணினித் திரைக்கு செல்லும் மின்சாரத்தை சோதனை செய்யுங்கள்.

விண்டோஸ் தொடங்கவில்லை எனில்.. 


உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதில் பிரச்னை எனில் safe mode-ல் இயக்கிப் பார்க்கவும். safe mode - ல் இயங்குகிதெனில் System restore செய்து பின்பு இயக்கலாம். சேப் மோட் செல்ல உங்கள் கணினியை தொடக்கும்போது F8 அழுத்தி Safe Mode-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுடைய கணினி துவங்கவில்லை எனில் windows recovery disk மூலம் உங்கள் கணினியை மீண்டும் சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

விண்டோஸ் தொடங்கிவிட்டது. ஆனால் மிக மெதுவாக இயங்குகிறது..


இந்த பிரச்னைகள் ஏற்பட பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் கணினி வேகம் குறைவதற்கு வைரஸ், த்ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் நச்சு நிரல்வரிகளால் ஏற்படும். உங்கள் கணினியை Anti Virus கொண்டு Scan செய்து இவற்றை நீக்கிவிட்டலாம்.

பல Sart-up Program களும் கணினி மெதுவாக இயங்க காரணமாக அமையும். இதற்கு நீங்கள் Run விண்டோவில் msconfig கொடுத்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத புரோகிராம்களை (checking off)டிக் எடுத்துவிடலாம். OS பதியப்பட்ட டிரைவில் அதிகளவு இடம் இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் disk drive-ல் Properties சென்று நீங்கள் டிஸ்க் கிளீனப் செய்யலாம். தேவையில்லாத புரோகிராம் இருக்குமெனில் அதை நீக்கவிடலாம். இதன் மூலம் கணினி விரைவாக செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

மென்பொருள் இயங்கவில்லையா?


உங்களுடைய மென்பொருள் காலாவதி ஆகியிருக்கலாம். ஒருவேளை அப்படி ஆகவில்லையெனில் மென்பொருளில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்க கூடும். அம்மென்பொருளை ஒரு முறை நீக்கிவிட்டு(Uninstall), பிறகு புதியதாக அந்த மென்பொருளை பதிந்து(Reinstall) பயன்படுத்தலாம்.

புறசாதனங்கள் (External device) செயல்படவில்லையா?


சில நேரங்களில் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் அச்சு இயந்திரம் (Printer), வருடி (Scanner) புறச்சாதனங்கள் (External device) செயல்படாமல் போகும். இவ்வாறான சூழ்நிலையில் முதலில் அந்த சாதனங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் வயர்களை ஒருமுறை எடுத்துவிட்டும் மீண்டும் பொருத்தி செயல்பட வைக்கலாம். மின்னிணைப்பை  அளிக்கும் கம்பிகளை (Electrical wire)ஒரு முறை சோதிப்பது அவசியம்.

நெட்வொர்க் பிரச்னையா?


நீங்கள் நெட்வொர்க் பிரச்னையை சந்தித்தீர்களென்றால் முதலில் உங்களுடைய ஹப்(HUB)ன் மின் இணைப்பையும், இணைத்திருக்கும் Adapter -ஐயும் சோதித்துப் பார்க்கவும். அவைகள் சரியாக இயங்கினால் உங்கள் ஐ.பி. அட்ரசை நீங்கள் உள்ளிட்டுப் பாருங்கள்.. இந்த இரண்டும் சரியாக இருந்தால் நிச்சயம் உங்கள் PCI ETHERNET card-ல் பிரச்னை இருக்கும். அவ்வாறான சூழலில் புதிய ஈதர்நெட் கார்ட் பயன்படுத்துவது அவசியம்.

இணைய இணைப்பில் பிரச்னையா?


முதலில் உங்களுடைய கணினியுடன் உங்களுடைய இணைய இணைப்பு வழங்கும் மோடம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கவும். சரியாக இருந்ததெனில் அடுத்து அதற்கு சரியான மின்னிணைப்பு உள்ளதா என்பதை சோதிக்கவும். சில நேரங்களில் இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்னையும் காரணமாக இருக்கலாம். அதனால் அவர்களைத் தொடர்புகொண்டு, ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணலாம். சில நேரங்களில் பல்வேறு கணினிகள் ஒரே இணைய இணைப்பில் இணைந்திருக்கும்பொழுது IP conflict ஏற்பட்டு இணைய இணைப்பு தொடர்பு அறுந்து போகலாம். இந்த சூழல் ஏற்படும்பொழுது கணினியிலேயே ஒரு குறுஞ்செய்தி தோன்றும். அப்பொழுது கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை அகற்றி விட்டும் மீண்டும் இணைப்பதன் மூலம் இணைய இணைப்பை பெற முடியும்.

Speed-up-internet

Hi guys, today let me show you something really important in browsing internet.

Internet takes a prominent place in today’s fast moving world. There is no place without internet connection, but the problem that we all face today in using internet is SPEED. There are numerous software in internet itself to increase the speed of it, but how many of those really works?


How would you feel if I tell you a way to increase the speed without any software or expenses? There is a simple windows trick, I tried it and felt the difference, it made my internet connection 20% - 30% speedy, and then only I got the idea to share it with you all.


Speed up Internet 20% - 30% without any Software

Let's see how to do :


Go to Start – Run or Click Windows key +R


Now type gpedit.msc



Click OK.

Now Local Group Policy will appear.


















Next navigate to "Administrative Templates" ---> 

"Network" --->
"QoS Packet Scheduler"

















In "QoS Packet Scheduler" double click on "Limit reservable bandwitdh". 


"Limit reservable bandwitdh" box will appear.

In "Limit reservable bandwitdhmake it "Enabled
Then set "Bandwidth limit: "0"
Click OK.






















Now you have completed and when you browse the internet, definitely you will feel the difference. If this article is useful, put your comments and also share it with your friends through social networks.
Meet you in the next article :)

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?



நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே. 

Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk  போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

இவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும். 

இந்த பதிவில் Firefox Portable Browser - ஐ பயன்படுத்தி உள்ளேன். 

டவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive - இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது. 


அடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.



இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

இதில் நீங்கள் இயங்குவது History - இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive - இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம். 

என்ன மென்பொருட்களை பயன்படுத்தலாம் ? 

இதில் எல்லா மென்பொருட்களையும் பயன்படுத்த முடியாத வசதி இருப்பினும் Chrome, Firefox, 7-Zip, Google Talk, FileZilla, Free Download Manager, GIMP, OpenOffice, LibreOffice, Inkscape, Skype, Sumatra PDF, TeamViewer, VLC, VirtualDub, WinRAR மற்றும் பல பயனுள்ள மென்பொருட்களை பயன்படுத்தலாம்.

பெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.




Portable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் - Poratabe Apps




என்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் - List of portable software






Ebay


இணையத்தில்  பொருட்கள்  வாங்க பெயர் போன ஒரு தளம்தான் Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது  எப்படி என்று பார்ப்போம்.

01.ebay.com இற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருளை தேடி பெருங்கள்.

அந்த பொருள் பற்றிய விற்பனையாளரால் தரப்ப்பட்டு  இருக்கும் விளக்கத்தை கவனமாக படியுங்கள்.இல்லையென்றால் பொருள் வீட்டுக்கு வந்த பிறகு அதை காணல இதை காணல என்று கவலைப்பட கூடிய நிலைதான் காணப்படும் (அனுபவம்)

நான் ebay இல் solar charger வாங்கும்போது, description இனை முழுமையாக வாசிக்காமல் ஆரம்பத்தில் வாங்கி விட்டேன். 6 நாட்களுக்கு பின் வீடு தேடி பொருள் வந்தது, பிறித்து  பார்த்தேன் எல்லாம் இருந்தது ஆனால் AC  Adapter இருக்கவில்லை என்னடா... இது என்று மறுபடியும் பொருள் பற்றிய விளக்கத்தை சரியாக வாசித்து பார்த்தேன்  AC  Adapter (not included)என்று இருந்தது.அதான் உங்களுக்கும் ஞாபக படுத்துகிறேன். பொருள் பற்றிய description ஐ அவதானமாக வாசிக்கவும்.

பொருள் பற்றிய விளக்கத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், Ask a question  என்பதை க்ளிக் செய்து அது பற்றி விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

02.விற்பனையாளரை பற்றிய தெரிந்து கொள்ளவும்.
நாம் தேடும் பொருட்களை பலபேர் வைத்து இருப்பார்கள், இதில் யாரிடம் வாங்குவது? என்ற கேள்வி உங்குளுக்கு வரும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்ய எத்தனை எத்தனை சில்லறை வியாபாரிகள் ஒவ்வொரு தெருக்கலிலும் காணப்படுகிறார்கள். இருந்தாலும் நாம் அனைவரிடமும் வாங்குவதில்லை, ஒரு சிலரிடமே வாங்குவோம் . காரணங்கள் பல இருந்தாலும் குறிப்பாக விலை மற்றும் தரத்தினையும் குறிப்பிட முடியும்.

அது போல்  தான் இந்த ebay இல் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது விற்பனையாளரிடம் Top Rated Plus என்ற சின்னம் இருக்கிறதா என்று பாருங்கள்,
 அடுத்து பொருள்  பிடிக்கவில்லையென்றால் திருப்பி அனுப்பி, பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றும் பாருங்கள் அத்துடன் அந்த பொருள் இலவசமாக ( Free shipping நமது வீட்டை வந்து சேருமா? அல்லது அதற்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமா என்று பாருங்கள்.

03.அது என்ன Bid அல்லது Buy It Now?

Bid என்பது ஏல விற்பனை முறையை குறிக்கும்.விற்பனையாளர் பொருளின் விலையை விட குறைந்த விலையில் ஏலத்தை ஆரம்பித்து வைத்திருப்பார். விரும்பியவர்கள் தங்களுக்கு விருப்பமான விலையில்  ஏலம் கேட்க முடியும்.குறிப்பிட்ட ஒரு காலத்தை (ஒரு வாரம்) அடிப்படையாக கொண்டு இந்த ஏலம் நடக்கும். யார் அதிகமாக ஏலம் கேட்டுடிருந்தாரோ அவர் 3 நாட்களுக்குல் விற்பனையாளருக்கு பணத்தை கொடுத்து, பொருளை பெற முடியும்.

Buy It Now என்பது பொருளை உடனடியாக வாங்குவதை குறிக்கும்.


04.அடுத்து ebay இல் உங்களுக்கு என்று ஒரு கணக்கை ஆரம்பியுங்கள்.

வீட்டு முகவரியை சரியாக கொடுங்கள்.இல்லை என்றால் பொருள் வேறு நபர்களுக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.

05.பணம் கொடுப்பது எப்படி?

உங்களிடம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் (Master or Visa or Amex) இருக்க  வேண்டும் (இல்லை என்றாலும் வாங்க முடியும் ஆனால் எல்லா விற்பனையாளரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்)

Card பற்றிய விபரங்களை சரியாக கொடுப்பது பற்றியும் அதை எப்படி Online இற்கு அக்டிவ் செய்வது என்றும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்

அவ்வளவுதான்....பொருட்கள் உங்கள் கைகளுக்கு கிடைத்த பின் அந்த விற்பனையாளர் பற்றி உங்கள் கருத்துக்களை மறந்துவிடாமல் கூறுங்கள்.
(இது பற்றிய அறிவுறுத்தல் ebay மூலம் வழங்கப்படும்)

இணையத்தின் மூலம் கொடுக்கள் வாங்கள் செய்வதற்கு என்று avast! Internet Security இல் Avast Safe-zone! என்ற வசதி இருக்கிறது, விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள்.