டொமைன் பெயர்(ஆள்களப் பெயர்) என்றால் என்ன?நீங்கள்
முகப்புத்தக பக்கத்திற்கு செல்வதற்கான IP முகவரி
2a03:2880:f10c:283:face:b00c:0:25de ஆகும். இதனை நீங்கள் ஞாபகம்
வைத்திருக்க கடினமாக இருக்கும். அதை ஞாபகம் வைத்திருப்பதை இலகுவாக்கவே
தனித்துவமான டொமைன் பெயர் உருவாக்கப்பட்டது. அதாவது ஒருவரின் தொலைபேசி
எண்ணை ஞாபகம் வைத்திருப்பதிலும் பார்க்க அவரின் பெயர் மூலம் தொலைபேசி எண்ணை
சேமித்து ஞாபகம் வைத்திருப்பது இலகுவானது.
அதற்கு நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்?நீங்கள்
அவற்றை உங்களுக்கென சொந்தமாக வாங்கவில்லை.அதனை வாடகைக்கு
எடுத்துள்ளீர்கள்.அதனால் தான் பணம் செலுத்த வேண்டும் .பணம் கட்டாது
விட்டுப்பாருங்கள் சில தவணைகளுக்கு பிறகு உங்கள் டொமைன் பெயரினை விற்று
விடுவார்கள்.
இந்த டொமைன் பெயர் தொடர்பான பிரிவினர்கள் தொடர்பான பாதையை நான்கு வகையாக பிரிக்க முடியும் அதாவது ,
•
பதிவகம்(Registry) : .Com .net .org .info போன்ற TLD(Top Level Domain)
களின் அனைத்து பதிவுகளையும் பராமரிக்கும் நிறுவனங்கள் பதிவகம் ஆகும்.
பதிவகமாக வர ICANN இடமிருந்து அனுமதி பெற வேண்டும். உதாரணமாக : Verisign
.com இணை கட்டுப்படுத்தும்
• பதிவாளர்(Registrar) : இவர்களிடம் இருந்தே நாம் டொமைன் பெயரினை வாடகைக்கு பெறுகிறோம் உதாரணமாக : WIX,Godaddy,Weebly
• பதிவு செய்பவர் (Registrant) : டொமைன் பெயரினை வாடகைக்கு பெற்று கொள்ளும் நீங்கள்,நான்,நிறுவனங்கள்
•
ICANN : இது அனைத்து தகவல்களையும் செயல்முறைகளையும் நிர்வகிப்பதற்கும்
ஒழுங்குமுறையாக செயற்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு சபை
ஆகும்.பதிவகத்திற்கு அனுமதியை வழங்கும்.
நீங்கள் செலுத்தும் பணத்தின் பெருந்தொகை பதிவாளருக்கும் ஒரு சிறிய அளவு தொகை பதிவகத்திற்கும் ICANN இற்கும் செலுத்தப்படும்.
ஒரு
வலைப்பக்கத்தை நடாத்தி செல்வதற்கு Domain name, hosting இரண்டுமே அவசியம்.
Domain name, hosting இரண்டையும் ஒரே நிறுவனத்திலேய வாங்க முடியும்.
அவ்வாறு அல்லாதபோது அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் டொமைன் பெயரையும்
இன்னொரு நிறுவனத்தில் சேமிப்பதற்கான சேவையகத்தையும் வாங்கும் போது நீங்கள்
உங்கள் டொமைன் பெயர் அமைப்பில் வலை சேவையகத்தின் தகவல்களை வழங்க
வேண்டும்.ஒரே நிறுவனத்தில் வாங்கினால் இந்த பிரச்சினைகள் உருவாகாது.
உங்கள் டொமைனை நீங்கள் பதிவுசெய்யும்போது, நீங்கள் ஒரு DNS (Domain
Name System) உடன் பதிவு செய்கிறீர்கள். DNS என்பது வலை சேவையகங்களின் ஐபி
முகவரிகளை அவற்றின் தொடர்புடைய டொமைன் பெயர்களுடன் இணைக்கும் ஒரு
தரவுத்தளமாகும். இது டொமைன் பெயர் வாங்கும் கம்பனியால் நிர்வகிக்கப்படும்.
உங்கள் உலாவிக்குச் சென்று ஒரு டொமைன் பெயரைத் தட்டச்சு செய்யும் போது(உதாரணம்:www.facebook.com)
, அந்த வேண்டுதல் பதிவகத்திற்கு(Registry) செல்வதுடன், இந்த டொமைன் பெயர்
எந்த கம்பனியிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டு
பிடித்து அந்த கம்பனியின் DNS உடன் இணைக்கும்.
டொமைன் பெயர் கம்பனி அனைத்து பதிவுகளிலும் www.facebook.com இற்கு பொருத்தமான பதிவு உள்ளதா என DNS தேடுகிறது. அந்த பதிவு கிடைத்தவுடன் அந்த டொமைன் பெயரை சேவையகத்தின் ஐபி முகவரியுடன் இணைக்கிறது. இறுதி முடிவு ? சேவையகம் ஒரு வலைப்பக்கத்தை உங்கள் உலாவிக்கு ஒரு நொடிக்குள் திருப்பித் தருகிறது.
படத்தை பார்ப்பதன் மூலம் மேலதிக விளக்கத்தை பெற்று கொள்ளவும்.
டொமைன் பெயர் கம்பனி அனைத்து பதிவுகளிலும் www.facebook.com இற்கு பொருத்தமான பதிவு உள்ளதா என DNS தேடுகிறது. அந்த பதிவு கிடைத்தவுடன் அந்த டொமைன் பெயரை சேவையகத்தின் ஐபி முகவரியுடன் இணைக்கிறது. இறுதி முடிவு ? சேவையகம் ஒரு வலைப்பக்கத்தை உங்கள் உலாவிக்கு ஒரு நொடிக்குள் திருப்பித் தருகிறது.
படத்தை பார்ப்பதன் மூலம் மேலதிக விளக்கத்தை பெற்று கொள்ளவும்.
http://www.quora.com இனை உதாரணமாக வைத்துக்கொண்டு பார்க்கலாம்.Quora இல் டொமைன் பெயரும் வலை சேவையகமும் தனித்தனியே வாங்கப்பட்டு உள்ளது எனவும் Quora வலை சேவையகம் Fastly எனும் அமெரிக்க வலை சேவையகம் என கொண்டு பார்க்கலாம்,இப்போது டொமைன் பெயர் வாங்கிய கம்பனியை A என கொள்வோம்.இப்போது Fastly வலை சேவையகத்தால் தரப்பட்ட தகவல்களை Quora தனது A இன் அமைப்பில் (settings) வழங்க வேண்டும்.
Fastly எனும் வலை சேவையகத்தில் பல இணையப்பக்கங்களுக்கான கோப்புகள் இருக்கலாம்.அதனால் Fastly கம்பனி இது Quora இனுடையது என்பதை இனங்கான Quoraஇற்கான கோப்பை http://fastly.quora.com என உருவாக்கும்.இவ்வாறே ஏனைய வலைப்பக்கங்களின் பெயருடன் கோப்பினை Fastly கம்பனி உருவாக்கும்.நீங்கள் http://www.quora.com என உங்கள் உலாவியில் தட்டச்சிடும் போது உங்கள் உலாவிக்கு எது Quora ? Quora இன் IP முகவரி என்ன என்று எதுவும் தெரியாது.இவை எல்லாம் A கம்பனியின் (டொமைன் பெயர் கம்பனியின்) DNS சேவையகத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். DNS இற்கு வேண்டுதல் அனுப்பப்பட்டு IP முகவரியை கண்டுபிடித்து டொமைன் பெயரை Fastly வலை சேவையகத்திற்கு வழிநடத்தும் சேவைக்காக நீங்கள் அவர்களுக்கு பணம் செலுத்துகிறீர்கள். fastly.quora.com என தட்டச்சிட்டாலும் நீங்கள் Quora இன் முகப்பு பக்கத்தை அடைய முடியும்.
டொமைன்
பெயர் கம்பனி பார்வையாளர்களை சரியான சேவையகத்திற்கு சுட்டிக்காட்ட
வேண்டும். டொமைன் பெயர் DNS சேவையகத்தில் இல்லையென்றால் உங்கள் வலைத்தளத்தை
யாரும் அடைய முடியாது. இந்த நிறுவனங்கள் டொமைன் பெயர்களை இலவசமாகக்
கொடுத்தால், அவர்கள் தங்கள் பெயர் சேவையகங்களை(Server) எவ்வாறு இயக்க
முடியும்?
இந்த அனைத்து செயற்பாடுகளும் நீங்கள் http://www.quora.com என தட்டச்சிட்டு காத்திருக்கும் அந்த நொடியில் பின்புலத்தில் மிக வேகமாக இடம்பெறும்.
அந்த சேவையகங்களை பராமரித்தல் , பார்வையாளர்களுக்கு வழிப்படுத்தலுக்கே உங்களிடம் இருந்து கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
சில பதிவாளர்கள் இலவசமாக தருகின்றனர்.இது அவர்களின் டொமைன் பெயரின் ஒரு பாகமாக இருக்கும் உதாரணமாக
www.quora.wordpress.com
www.quora.weebly.com
www.quora.blogspot.com
http://www.quora.board.com என்றவாறு இருக்கும்.இது Sub domain எனப்படும்.
www.quora.wordpress.com
www.quora.weebly.com
www.quora.blogspot.com
http://www.quora.board.com என்றவாறு இருக்கும்.இது Sub domain எனப்படும்.