![]() |
| Add Code Converter |
வணக்கம் நண்பர்களே.. பிளாக்கர் தளம் மூலம் கணிசமான பணம் சம்பாதிக்க முடியும். பிளாக்கர் வலைப்பூக்களில் Google போன்ற விளம்பர நிறுவனங்கள் கொடுக்கும் நிரல்வரிகளை உங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகிறது.
தொடர்ச்சியாக உங்ளுடைய தளத்தை நிறையபேர் படிக்கும்போது தளமானது பிரபலமடையும். அவ்வாறு பிரபலமான தளத்திற்கு google adsense, chitka, AdSense, Text Link Ads, AdBrite, LinkWorth, Amazon போன்ற நிறுவனங்கள் வலைத்தளங்களுக்கான ஆட்சென்ஸ் (விளம்பரங்கள்) தருகிறது.
உங்கள் தளம் அவர்கள் குறிப்பிட்ட AdSense program policies களுக்கு உட்பட்டு இருப்பின் உங்களுக்கு ஆட்சென்ஸ் அப்ரூவல் உடனடியாக கிடைக்கும். பிறகு உங்கள் தளத்தில் காட்டுவதற்கான விளம்பர நிரல்கள் அத்தளத்தில் கிடைக்கும்.
அவ்வாறு பெற்ற ஆட்சென்ஸ் கோட் (Adsense code) பெரும்பாலும் JAVA SCRIPT அடிப்படையாகக் கொண்டிருக்கும். நேரடியாக அந்த நிரல்வரிகளை பிளாக்கர் டெம்ப்ளேட்டின் நிரல்வரிகளுடன் இணைக்கும் போது அவை வேலை செய்யாது. தனியாக ஒரு விட்ஜெட்டாக வைக்கும்பொழுது அவைகள் பிளாக்கர் தளங்களில் டிஸ்பிளே ஆகும்.
பிளாக்கர் பதிவிற்கு மேலும் கீழும் விளம்பரங்களை வைக்க வேண்டுமெனில் கண்டிப்பாக அந்த நிரல்வரிகளை Encode செய்ய வேண்டும். பிளாக்கரில் உள்ள நிரல் வரிகளானது XML அடிப்படையில் இயங்க கூடியது. எனவே அதில் பயன்படுத்தப்படும் HTML Tag களை encode செய்த பிறகு பயன்படுத்தினால், விளம்பர நிரல்கள் நன்றாக தொழிற்படும்.
அந்த வகையில் உங்கள் விளம்பர நிரல்வரிகளை பிளாக்கருக்கு ஏற்றவாறு கன்வர்ட் செய்ய சில இணையதளங்கள் உள்ளன. இந்த தளத்திற்கு சென்று
அதாவது encode செய்துகொள்ளலாம். பிறகு மாற்றப்பட்ட நிரல்வரிகளை உங்கள் பிளாக்கரின் வார்ப்புருவில் வேண்டிய இடத்தில் சேர்த்து விடுங்கள். இப்போது உங்கள் விளம்பரங்கள் தளத்தில் அருமையாக காட்சியளிக்கும்.
கீழுள்ள இணைப்பை அழுத்தி, உங்களுடைய கூகிள் ADD Code - ஐ Encode செய்துகொள்ளலாம்.
UPDATE: ஆட்கோட் கன்வர்டர்
Encoding என்ற உடனேயே இந்த தளமும் நினைவுக்கு வருகிறது. நான் அடிக்கடி பயன்படுத்தும் தளமும் கூட..
இந்த தளத்தில் நேரடியாக உங்கள் விளம்பர கோடிங்கை convert செய்ய இந்த இணைப்பில் செல்லவும்.
இந்த இணைப்பில் சென்று அங்குள்ள முதல் பெட்டியில் நிரல்வரிகளை உள்ளிட்டால் தானாகவே உங்களுக்கு encode செய்யப்பட்ட நிரல்கள் கீழுள்ள பெட்டியில் கிடைக்கும்.
நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் போன்றவைகளைப் பயன்படுத்தினாலும் இந்த மாற்றங்கள் AdSense program policies க்கு எதிரானது அல்ல. அதாவது இதனால் ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை.
Xml blogger -க்கு ஏற்றவகையில் adsense code-ஐ அதற்குத் தகுந்தவாறு மாற்றுகிறோம்.. அவ்வளவே.. இதையே தளத்தில் page source சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். Page Source -ல் விளம்பர நிறுவனம் அளித்த ஒரிஜினல் விளம்பர நிரல்வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே காட்டும்.
இவ்வாறு encoding செய்யும் போது HTML ஸ்பெஷல் கேரக்டர்கள் <, >, & போன்றவை <, >, & இவ்வாறு மாற்றப்படுகிறது. அவ்வளவே..!!!!
இனி உங்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பர நிரல்வரிகளை உங்கள் தளம், வலைப்பூவில் உள்ளிட்டு, கணிசமான பணம் சம்பாதியுங்கள்...

